ஹிண்ட்ராப் மீதான ஜோகூர் சுல்தானின் மதிப்பீடு தவறு .

ஜோகூரில் கடந்த வாரம் இந்திய சமூகத்துடனான விருந்து நிகழ்ச்சியில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் ஆற்றிய உரை குறித்து ஹிண்ட்ராப அதிருப்தி அடைந்துள்ளது. சுல்தான் கீழ் கண்ட நிலையில் பே சியிரூ பபதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1) இனமும் சமயமும் உணர்ச்சிகரமான பிரச்சினைகள். எனது மக்களின் ஒற்றுமைக்கு மிரட்டலை ஏற்படுத்தக் கூடிய பிரச்னையை எத்தரப்பினரும் உருவாக்குவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
2) இந்திய சமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக உணர்ச்சிகரமான பிரச்சினைகளை எழுப்பி நாட்டில் தகராற்றை உருவாக்கும் தரப்பாக ஹிண்ட்ராப் இருபபதாக சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
3) அத்தரப்புக்கு இந்திய சமூகததின் பெரும்பான்மையான ஆதரவு இல்லை. அதன முக்கிய நோக்கம் அரசியல் உந்துதலாகும் என்று சுல்தான் இப்ராஹிம் மேலும் கூறினார் .
4) "பங்கசா ஜோகூர் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இருகிறோம். அதற்கு மிரட்டலை ஏற்படுத்தக் கூடிய தரப்பினரின் நோக்கத்திற்கு இலக்காகி விடக் கூடா தென்று நன் எனது குடிக்களை வலியுருத்துகிறேன்" என்று அவர் கூ றியுள்ளார்.
மலேசியாவில் இந்திய சமூகத்தை பாதிக்கும் மனித உரிமைப் பிரச்னைகளுக்கு ஹிண்ட்ராப் ஆற்றும் பங்கு குறித்து மேன்மை தங்கிய சுல்தானுக்கு தவறான ஆலோசனை கூறப்பட்டிருபபதாக ஹிண்ட்ராப் கருதுகிறது.அது போன்ற தவறான அறிவுரைகளால் ஹிண்ட்ராப்பின் உண்மையான போராட்டம், கொள்கைகள் குறித்து மேன்மை தங்கிய சுல்தான தவறான , எதிரிடையான புரிதலைப் பெற்றிருக்கலாம் . அப்படி தவறான ஆலோசனை கூறப்பட்டிருக்காவிட்டால் இந்திய சமூகத்தின் சட்டபூரவ மனித உரிமைப் பிரச்சினைகள் , தீர்க்கப்படாத நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்காக போராடும் ஹிண்ட்ராப்பின் செயலில் தலையிட்டிருக்க மாட்டார்.
நாட்டில் உணர்சசிகரமான பிரச்சினைகளை எழுப்பி நெருக்கடியை உருவாக்கும் இயக்கம் என சுல்தான் கூருவது தவறாகும் என ஹிண்ட்ராப் திட்டவட்டமாக கூறுகிறது . சிறுபான்மை இந்திய சமூகததின் மீது மலேசிய அரசாங்கம் நியாய மற்ற போக்கை கடைபிடித்து இரூக்காவிட்டால் 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் தெருக்களில் 100,000 க்கும் அதிகமான இந்தியர்கள் திரண்டிருக்க மாட்டார்கள். மலேசியர்களுக்கு இனமும் , சமயமும் மிகவும் முக்கியமானதாகும். 4-5 தலை முறைகளாக தோட்டங்களில் இருந்த 800,000 பேர் புலம் பெயர்ந்தனர். இன்னும் கிட்டதட்ட 300,000 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். வேலை ,கல்வி, வாணிக வாய்ய்புகளில் ஓரம் கட்டப்படுகிறார்கள. நாட்டின் மேம்பாட்டில் இந்தியர்களை புறக்கநித்தது, சுதந்திரத்துக்கு முன்னரிலிருந்து கோவிலகள இடிபட்டது , இந்திய சமூகததிர கான நிலமின்மை ஆகியவை நாட்டில் திட்டம்மிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தன , இந்த ஓரங்கட்டும் , ஒடுக்கு முறைகளால் 2007 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த 40 ஆண்டுகளாக இந்திய சமூகம் புறக்கணிகப்பட டிருபபதை 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் பொதுவில் ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அந்த வரலாற்றுத தவறுகளை திருத்துவதாகவும் பிரதம்ர் உறுதி அளித்துள்ளார். சுல்தான் கூறியதைப் போன்று நாங்கள் இருந்திருந்தால் அரசாங்கம் எங்களை இணைத்திருக்காது . பிரதமர் ஹின்றாப்பை அரசாங்கத்திலும் இடம் பெறச் செய்தார்.துர திஷ்டவசமாக பிரதமர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறி மனித உரிமை பணிகளை தொடர முடிவெடுத்தது. ஐக்கிய நாட்டுச்சபை , அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கு இதற்கு முன்பு அனுப்பபட்ட இந்திய சமூகம் மீதான மனித உரிமை அறிக்கைகள் சுல்தான் பார்வைக்கு ஜோகூர் மாளிகையில் சமர்ப்பிக்கப்படும்.
அந்த ஆவணங்கள் மலேசிய இந்தியர்கல் பல ஆண்டுகளாக ஒரங்கட்டப்பட்டதையும், ஒடுக்கப்பட்டதையும் சுல்தானுக்கு மதிப்பீடு செய்ய உதவும். இந்த விவரங்களை பெற்ற பின்னர் மேன்மை தங்கிய சுல்தான் மலேசியாவில் இந்தியர்கள் எதிர் நோக்கிய நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர , விரிவான தீர்வு காணும் ஹின்றாப்பின் புரிந்துணர்வு உடன்பாட்டை செயல்படுத்த மத்திய அரசாங்கத்திடம் ஆலோசனை கூறுவார் என நம்புகிறோம் . இதன் வழி மேன்மை தங்கிய சுல்தான் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு.
பொ.வேதமூர்த்தி
தலைவர்
ஹிண்ட்ராப்