Font Size

Layout

Menu Style

Cpanel

மலேசிய ஏழை இந்தியர் பிரஜா உரிமை அற்றவர்களின் பிரச்சனையைப் போக்கும் வழிகள் (MoU).

ganesan stateless 3.jpg


மலேசிய ஏழை இந்தியர் பிரஜா
உரிமைஅற்றவர்களின் பிரச்சனையைத் தீர்க்க திட்டங்கள்.

1. மலேசியாவில் வாழும் அத்தனை பிரஜா உரிமை அற்ற இந்தியர்கள், பிறப்பு பத்திரம் இல்லாத இந்தியர்கள், நீல அடையாள அட்டை இல்லாத இந்தியர்கள், சிகப்பு அடையாள அட்டை கொண்ட இந்தியர்களின் புள்ளி விவர எண்ணிக்கை முதலில் பெறப்பட வேண்டும்.

2. இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வாழ்ந்தாலும் பல மலேசிய இந்தியர்கள் தகுந்த ஆவணங்கள் கொண்டிருக்கவில்லை. அப்படிபட்டவர்களின் நிலையை ஆராய சாதாரண முறையோடு வெளிப்படையான வகையில் அவர்களின் நிலையை விசாரிக்க வேண்டும்.

3. அப்படி மலேசிய பிரஜா உரிமை அற்ற நபர் இந்நாட்டில் தான் பிறந்ததாகக் கூறினால், அவரின் பிறந்த தகவல்களை அறிந்து ஒரு சமுக அந்தஸ்து பெற்ற நபர் வழங்கும் சத்திய பிரமான பத்திரத்தை சம்பந்தப்பட்ட இலாகா பெற்றுக் கொள்ள வேண்டும்.

4. மலேசியாவில் வாழும் பல்லாயிர சிகப்பு அடையாள அட்டை மலேசிய இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்க்க ஒரு முகப்படுத்தப்பட்ட வெளிப்படையான ஒரு தீர்வு தேவைப்படுகிறது.

5. மலேசிய பிரஜா உரிமைக்கு மனு போடும் மலேசிய இந்தியர்கள், பிரஜா உரிமைக்கு உரிமை பெற்றவர்களா, இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு முறையாக வடிவமைக்கப்பட்டு அமலாக்கம் காண வேண்டும்.

6. வடிவமைக்கப்படவுள்ள செயல்முறை மலேசிய அரசியல் சாசணத்திற்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஹிண்ட்ராபின் உறுதியான நம்பிக்கை இந்த மாதிரியான அணுகுமுறை ஏற்று புது திட்டங்கள் வகுக்கவில்லை என்றால் மலேசிய இந்திய மக்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை பெறமாட்டார்கள். இது உறுதி திரு.என்.

கணேசன்
ஹிண்ட்ராப் ஆலோசகர்