Font Size

Layout

Menu Style

Cpanel

சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா?

waytha_sir_3.jpgநம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயதிற்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறிவிட்டது. சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு செத்து விட்டதாக தோன்றுகிறது. நீதித்துறை, போலீஸ் மற்றும் அரசு கழகங்களும் ஒரு இனவாதிகளாக உருமாறி உள்ளனர் என்றே நான் கருதுகிறேன்.

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. நீதித்துறை மற்றும் போலிஸ் என் வாயை அடைக்க மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் அவர்கள் உண்மையை வாயை அடைக்க முடியாது.உண்மை ஒரு போதும் சாகாது.

கெட்கொ "Gatco" மக்கள் நில அபகரிப்பு பிரச்சனையில் போலீஸ்,ரோந்து பணியாளர்கள் மாநில அரசும் இந்த நில அபகரிப்பில் கூட்டு கலவனியாக இருகின்றனர். இந்த சதிக் கூட்டத்துடன் சட்டமும் சேர்ந்து அங்கு வேலை செய்யும் மக்களை சொல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு இந்த அப்பாவி பெண்கள் முன்னிலையில் நெகிரி செம்பிலான் காவல் துறையை சேர்ந்த மேல் அதிகாரி, நாட்டின் காவல் துறையுக்கே களங்கம் விளைவிக்கும் அருவறுப்பான செயல் ஒன்றை செய்தார்.

kg getco police man.jpgஇந்த சார்ஜன் தன் சிலுவரின் ஜிப்பை அவிழ்த்து பாலியல் வன்முறை தூண்டி விட்டு அந்த பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்த போதிலும் பெரிதாக அந்த முறை கேடான செயலை புரிந்த அதிகாரிக்கு தண்டை ஏதும் கிடைக்க போவதில்லை. அவரை ஒருவேளை இடம் மாற்றல் செய்வார்கள்.ஏன் இந்த ஈன செயலை புரிந்த அவருக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.



மேலும் போலிஸ் காவலில் சசிகுமார் என்ற இளைஞனின் மரணம் குறித்து அட்டர்னி ஜெனரல்இன்னும் மௌனம் சாதித்து கொண்டிருக்கிறார். இந்த இளைஞனின் உடல் சவக்கிடங்கில் இன்னும் கிடக்கிறது.

shashikumar a l selvam death.jpgஇவரின் இறப்பின் மர்மத்தை கண்டுபிடிக்கும் வகையில் சிறப்பு புலன் விசாரணை நடந்தேறி இருக்கவேண்டும். இதுவரையில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த இளைஞனுக்கு நியாமான தீர்ப்பு வழங்க தவறி விட்டது. ஒரு சார்டின் மற்றும் அரிசி திருடியதட்காய் இவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுங்கள் சிறை தண்டனை அநீதியாய் தோன்றுகிறது.

கூடிய விரைவில் இதை நியாய படுத்தும் வகையில் மரணமுற்ற இளைஞனுக்கும் ஒரு கொடுரமான குற்ற கும்பலுக்கும் தொடர்பு உண்டு என்ற ஜோடிப்பு வேலைகள் நடந்தேறி அனைவரையும் நம்ப வைத்துவிடும். அதோடு இந்நாட்டில் நமது இந்திய இளைஞர்கள் மீது ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கிவிடும். கெட்கொ "Gatco" அடக்கு முறையாளர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுவிட்டது. மேலும் அண்மையில் போலிஸ் காவலில் இருந்து மரணம் அடைந்த 20 வயது இளைஞனின் பாட்டி காவல் துறையிடம் கொடுத்த புகார் இந்த ஜனநாயக நாட்டில் மயான அமைதியாய் போய்விடும். இதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் . சட்டம் எடுக்கபோகபோவதில்லை.பண பலம் உடையவர்கள் அயல் நாட்டில் வசதி வாய்ப்புகளுடன் இங்கிருந்து மாற்றலாகி அங்கு குடியேறிவிடுவார்கள். ஆனால் இன் நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலை என்னவாகும்? இந்த ஜனநாய நாட்டின் தர்ம தேவதையின் அர்தமற்ற அமைதியால் சொந்த நாட்டிலே இவர்களுக்கு அடிமைகளாக மாறி பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.

ஹிண்ட்ராப் தலைவர்
பொ.வேத மூர்த்தி