Font Size

Layout

Menu Style

Cpanel

உங்களின் புளுகுமூட்டையை நிறுத்தி கொள்ளுங்கள். பிரதமருக்கு ஹிண்ட்ராப் எச்சரிக்கை.

WAYTHAMOORTHY-AND-NAJIB-300x199.jpgவெளிநாட்டு வெள்ளையர்கள் மூலம் இந்நாட்டு இந்தியர்க்களுக்கான வளர்ச்சி செயல் திட்டத்தை பிரதமர் நஜிப் தனது 11 வது மலேசியா திட்டத்தின் வழி குறிப்பபிட்டு இருப்பது ஒரு அறிவு பூர்வமற்ற செயல் என ஹிண்ட்ராப் சாடியது. ஹிண்ட்ராப் பிரதமருக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுகிறது.உங்களின் புளுகுமூட்டையை நிறுத்தி கொள்ளுங்கள்.

உங்களின் அடிமை கூட்டணி கட்சி ம.இ.கா வின் மூலம் இந்த ஏமாற்று வேலைகள் முழு வெற்றி அடையாத நிலையில் உங்களின் புதிய முயற்சியாக அந்நிய நிறுவனகள் மற்றும் வெள்ளையர்களை கொண்டு நீங்கள் ஆடும் இந்த கபட நாடகம் ஏழை இந்தியர்களின் வாழ்வில் எந்த பயனும் கொண்டு வராது.உங்களின் ஜம்பம் எல்லாம் உங்களின் மேல் மட்ட அல்லக்கைகளைகளிடமே பலிக்கும். அதே வேளையில் அடிமட்ட இந்தியர்கள் எல்லாம் உங்களை நம்புவதாக அவர்களே ஒரு மாயையை உருவகிவிடுவர்கள்.

அதே வேளையில் இன்று கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இந்தியர்களுக்காக " மலேசியா இந்தியர்கள் வளர்ச்சி செயல் திட்ட பட்டறை" வளர்ச்சி மற்றும் வர்த்த நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஹாங் காங் நிறுவன மூலம் செயல் படுத்த விருப்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது என ஹிண்ட்ராப் கூறியது.

இதன் தொடர்பில் ஒரு வெளிநாட்டு நிறுவமான Human Capital Group Asia என்ற குழுமத்தின் தலைவர் திரு.டோகுலஸ் டீன் இன்று ஷெரட்டன் இம்பெரியால் விடுதியில் நடைபெறவிருக்கும் மலேசியா இந்தியர்களின் வளர்ச்சி செயல் திட்ட பட்டறையில் கலந்து கொள்ளுமாறு பல இந்திய தலைவர்கள் மற்றும் இயக்கங்களையும் குறுந்தகவல்கள் அனுப்பி உள்ளதாய் தகவல் வந்த வண்ணம் உள்ளது. நாட்டின் மேற்கூறிய தகவல் உண்மை என்றல் இது பிரதமரின் அறிவின்மையை புலப்படுத்துகிறது.

அடிமட்ட மக்களின் உணர்வுகளையும் இன்னல்களையும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது பிரதமர் புழு கூட்டுக்குள்ளே வாழ்ந்து கொண்டிருப்பதை புலபடுதுகிறது. மேலும் வெள்ளையர்களை அவரின் நாடகத்தில் இணைத்து இந்நாட்டு இந்தியர்களை ஏமாற்றும் அறிவீனமும் புரிகிறது. பிரதமர், அவரின் " நம்பிக்கை " எனும் பொய்யான உறுதிமொழியிலிருந்து தப்பி ஓடிவிட முடியாது. அவர் ஹிண்ட்ராப் செயல் திட்ட ஒப்பத்ததந்தை கையெழுத்திட்டு அதை அமுல்படுத்தாமல் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு செய்த தூரோகத்தை இந்நாட்டு இந்தியர்கள் யாரும் எளிதாக எடுத்து கொள்ள போவதுமில்லை. அவர்களின் சினத்தை பிரதமர் நஜிப் இன்னும் பார்க்கவில்லை.

கடந்த 45 ஆண்டுகளில் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கீழ் குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் குடும்ப மாத வருமானம் RM264.00யில் இருந்து RM6,141.00 அதிகரித்துள்ளதாய், 11 வது மலேசியா திட்ட பக்கம் 7 & 8 குறிபிடபட்டது ஒரு மிக பெரிய பொய் ஹிண்ட்ராப் என தெளிவு படுத்தியது .

அ) புதிய பொருளாதாரக் கொள்கை 1971-1990
ஆ) தேசிய வளர்ச்சிக் கொள்கை 1991-2000
இ) தேசிய நோக்க கொள்கை 2001-2010.
ஈ) தேசிய உருமாற்ற கொள்கை 2011-2020.

நாடு தழுவிய நிலையில் இன்னமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சுமார் 400.00 மாத வருமானம் பெரும் வேளையில் மேற் கூறப்பட்டுள்ள அறிக்கை பொய்யென நிருபிக்கும் ஆதாரங்கள் ஹிண்ட்ராப்பிடம் உள்ளன. மேற் கூறப்பட்டுள்ள திட்டங்களில் இதுவரையில் ஒரு ட்ரில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இனவாதம் மற்றும் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு காரணமாக 70 விழுகாட்டு மேற்பட்ட இந்தியர்கள் அடிமட்டத்தில் இருப்பது உடன் தேசிய வளர்ச்சி நிரோட்டத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர் என ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கூறினார்.