Font Size

Layout

Menu Style

Cpanel

ஹிண்ட்ராஃப் ஒப்பந்தத்தை பிரதமர் புறக்கணிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம்

ganesan-n-hindraf-1-255x300.jpgகோலாலம்பூர், மேத் திங்கள்: மலேசியவாழ் இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி கடந்த 2013, ஏப்ரல் 18-ஆம் நாளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தேசிய முன்னணி அரசு சார்பில் கையொப்பமிட்ட பிரதமர், இன்று வரை அலட்சியம் காட்டி வருவதன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா.கணேசன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 219 பேருக்கும் நாடாளுமன்ற மேலவை(செனட்) உறுப்பினர்கள் 66 பேருக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.

அரசியல் களத்தில் வாக்கு அறுவடைக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் பின் வாக்கு வேட்டை முடிந்ததும் பொது மக்களைக் குறித்து கவலைப் படாமல் ஒதுங்கிக் கொள்வதும் எந்த வகையிலும் நியாயம் இல்லை. குறிப்பாக, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிடும் போக்கு ஜனநாயக நடைமுறையில் மிகவும் பழுதானது. பிரதமர் இந்த வேலையைத்தான் பழுதற செய்து வருகிறார்.

எனவே, மக்கள் மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ளவர்கள், தங்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும் ஒருமைப்பாட்டையும் எப்பொழுதும் பேணி வர வேண்டும். அப்பொழுதுதான், சமூக நலம் சார்ந்த பொதுப் பிரச்சினைகளில் இணைந்து செயல்பட முடியும் என்று வலியுறுத்த விரும்புவதாக கணேசன் தெரிவித்துள்ளார்.

ஹிண்ட்ராஃப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, அந்த ஒப்பந்தத்தில் தேசிய முன்னணி அரசு சார்பில் கால வரையறை நிர்ணமிக்கப்பட்டு, அதற்குள் சில திட்டங்களை நிறைவேற்றுக்வதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போதைய பதின்மூன்றாவது நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவதாக பிரதமர் வாக்குறுதி தந்த எதனையும் நிறைவேற்றவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் களத்தை எதிர்கொண்டபோது, இந்திய சமுதாய மக்களின் வாக்குகளையும் பெற்றுதான் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, அவர்களுக்கும் இந்தப் பிரச்சினையில் கடப்பாடு உண்டு. அதனால், ஹிண்ட்ராஃப் ஒப்பந்தப்படி வளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி பிரதமரை நெருக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நா.கணேசன்
தேசிய அலோசகர்-ஹிண்ட்ராஃப்
08-05-2015