Font Size

Layout

Menu Style

Cpanel

56 ஆண்டுகளாக உறங்கிகொண்டிருந்த நீங்கள்தான் இந்தியர்களின் பிரதிநிதியா???

ramesh perak hindraf coordinator.jpgபதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு,நம் இந்தியர்களின் மானத்தை விலைப்பேசும் கூட்டமல்ல இந்த ஹிண்ட்ராப் இயக்கம்.

ஒரு கண்ணத்தில் அறைந்தால்,மறுகண்ணம் காட்டும் உங்களுடன் இணைந்து வேலை செய்வதைவிட ,நாங்கள் கிடைத்த பதவியை துறப்பதே மேல்.

பதவிக்காக தன்மானம் இழந்த அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். 56 ஆண்டுகளாக தேசிய முன்னனி கட்சியின் உறுப்பு கட்சியாக இருந்து ,நம் இந்திய சமுகத்தினருக்கு செய்யவேண்டியதை புறக்கணித்தது ஏன்? இந்தியர்களின் கல்வி மேம்பாடு , வீடமைப்பு திட்டம் ,குடியுரிமை மற்றும் வியாபார தொழில் நலனுக்காக இதுவரை அக்கறை காட்டாமல்,இன்றும் நாங்கள் போராடும்பொழுது அதையும் செயல்படுத்தவிடாமல் தடையாய் இருக்கும் நீங்களா இந்தியர்களின் பிரதிநிதி??? நாங்கள் கடந்த தேர்தலில் தேசிய முன்னனி அரசாங்கத்திற்க்கு ஆதரவு வழங்கியதன் நோக்கம்,ஏழை இந்தியர்களின் வாழ்க்கை தரம் மேம்பட ,இந்தியர்களுக்கு நிரந்தர திர்வுக்காக மட்டும்தான்.

அதுவும் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை மட்டுமே வழங்கினோம். அன்று பிரதமர் புரிந்துணர்வு ஒப்பந்தம் (M.O.U ) கையெழுத்திடும்போது உங்கள் ம.இ.கா தலைவர்கள் முன்னிலையில் இந்தியர்களிடம் பொது மண்ணிப்பு கேட்டு,தான் இந்தியர்களுக்கு மேலும் பல மாற்றங்களை செய்வேன் என்று உறுதி கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (M.O.U) ஹிண்ட்ராப்புக்கும் தேசிய முன்னனிக்கும் இடையிலான ஒப்பந்தம்.பிரதமரை கேள்விக்கேட்க எல்லா உரிமைகளும் எங்களுக்கு உண்டு.இயற்கை மரணம் அடைந்துகொண்டிருக்கும் உங்கள் கட்சியின் உள்விவகாரங்களை மட்டும் பாருங்கள்.எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

ஊர் அறிய ,உலகறிய கையெளுத்திட்ட திட்டங்களை ஏன் இன்னும் செயல்படுத்தவில்லை என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்று திரு.ரமேஸ் பெரியசாமி,
பேராக் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பதிலடி தந்தார்.