Font Size

Layout

Menu Style

Cpanel

ஹிண்ட்ராப் வழக்கு - மலேசிய சிறுபான்மையினர் கை கோர்க்க வேண்டும்.

ramu kedah hindraf.jpgபிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்த வரலாற்று முக்கியதுவமிக்க வழக்கு இப்பொழுது நாட்டில் பேரளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த வழக்கு மூலம் விடுப்பட்டு போன மலேசிய இந்தியர்களின் உரிமைகள் மீண்டும் பெற வாய்ப்புகள் அதிகம் என நம்பலாம். நம் முன்னோர்கள் சிந்திய வியர்வை துளிகளும் உதிரமும்தான் இந்த நாட்டின் முன்னேற்றதிற்கும் சுபிட்சத்திற்கும் வித்திட்டன என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும். வரலாற்று சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நம் முன்னோர்களின் உழப்பை மூலதனமாக பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கம் கோடி கோடியாக சம்பாதித்தனர்.

பல ஆசை வார்த்தைகளை காட்டி ஏமாற்றி உற்றார் உறவினர்களிடம் இருந்து பிரித்து மலாயா தோட்டப்புறங்களில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட நம் முன்னோர்களை குறைந்த ஊதியத்திற்கு சக்கையாய் பிழிந்தெடுக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் பல லட்சம் பேர் உயிர் துறந்தனர். நாடு சுதந்திரம் அடைய வகை செய்ய " லார்ட் ரெய்ட்" என்பவரின் தலைமையில் "ரெய்ட் கமிஷன்" உருவாக்கப்பட்டு அம்னோ தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பொது விவாதங்கள் நடத்தி அரசியல் சாசனம் எழுதப்பட்டது. அப்போது சிறுபன்மையினர்களின் தரப்பில் முன்மொழியப்பட்ட குறிப்புகளை முற்றாக நிராகரித்தனர்.

பெரும்பான்மை இனத்துக்கும் மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகளையும் பாதுகாக்க முக்கியதுவம் அளித்தனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு இப்போது வந்துள்ளது. அன்று மலாய் ஆட்சியாளர்களும் அம்னோ தலைவர்களும் தலையீட்டுக்கு வளைந்து கொடுத்து அரசியல் சாசனத்தை ஒரு தலை பட்சமாக உருவாக்கியுள்ள விவரமும் வெளியாகி உள்ளது. சுதந்திரதிற்கு பின்னர் கவனித்து கொள்ளலாம் என்று கூறி அப்போதே சிறுபான்மையினரின் குரலை நசுக்கினர். இதனால் நம் இந்தியர்கள் மட்டும் அல்ல, மலாயா, சபா சரவாக் பூர்வ குடி மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இன்று அவர்களின் உரிமைகளையும் பறிக்க பட்டுள்ளன என்ற திடுக்கிடும் தகவல்கள் ஹிண்ட்ராப் சேகரித்த ஆவணங்களின் மூலம் கிடைத்துள்ளது.

அவர்களின் நிலங்கள் மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் வஞ்சகமாக அபகரிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சிதைதிருக்கின்றனர்.

ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனக்குறைவாலும் ஏனோதானோ போக்கினாலும் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்கள் அனைவரும் ஹிண்ட்ராப் தொடுத்த வழக்குக்கு வலு சேர்க்கும் வண்ணம் கை கோர்க்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுக்காக்க பட வேண்டுமென்றால் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

இதை செய்வதற்கு ஹிண்ட்ராப் வழக்கு பெரும் துணை புரியும் என்பதால் எல்லாரும் உணர்ந்து முழு ஆதரவு அளித்து அடுத்த தலைமுறையை இனமானத்துடன் வாழ வகை செய்வோம்.


இராமு இராமசாமி
ஆலோசகர் ஹிண்ட்ராப் கடாரம்